திருமண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஸ்ருதியிடம் கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இன்னும் திரைக்கு வராத ”ஆடி போனா ஆவணி” படத்தில் நடித்துள்ள நடிகை சுருதி சமூக வலைதளத்தின் அவருக்கு மணமகன் தேடுவதாக போட்டோவை பதிவிட்டு விளம்பரம் செய்துள்ளார். இதை கண்ட பலரும் அவரை தொடர்பு கொண்டு நெருங்கி பேசியுள்ளனர். அப்போது தண்ணனிடம் நெருங்கி பேசுபவர்களிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியதுடன் , பல்வேறு காரணங்களை சொல்லி பண மோசடி செய்துள்ளார்.
இப்படி பலரிடமும் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்து திருமணம் செய்யாமல் ஏராளமான இளைஞர்களை ஏமாற்றியதாகவும், சாப்ட்வேர் இன்ஜினியர் தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் என குறிவைத்து இந்த மோசடியில் ஸ்ருதி ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சேலத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் படி காவல்துறையினர் ஸ்ருதியிடம் 3 மணி விசாரணை நடத்தினர்.