தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு போது நடைபெற்று வரும் கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற அனுமதி வழங்கப்படும். அத்தியாவசிய தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கலாம். தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை ஆலைகளும் ஊரடங்கு போது செயல்படலாம். ஆலை ஊழியர்கள் அடையாள அட்டையுடன் சொந்த வாகனம். நிறுவன பேருந்துகளில் செல்ல அனுமதி உள்ளது.