Categories
மாநில செய்திகள்

தனது ஒரு மாத சம்பளத்தை…. கொரோனா சிகிச்சைக்கு கொடுத்த எம்பி…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

எனவே  ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்கவும், கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றவும் பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்க #HELPKARURBREATH என்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. அதற்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ஒரு மாத ஊதியத்தை அளிப்பதாகவும், மேலும் பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |