Categories
மாநில செய்திகள்

மே-24கு பிறகு முழு ஊரடங்கு வராது…. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு  வெளியே சென்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று  ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மே 24-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை ஏற்படாது. மறுபடியும் ஊரடங்கு என்கிற சூழ்நிலை உருவாகினால் தொழில் நிறுவனங்கள் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |