Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை …. வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன் ‘…!!!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ,சபலென்கா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் .

நேற்று முன்தினம் ஸ்பெயின் நாட்டில் களிமண் தரையில் நடைபெற்ற போட்டியில் ,  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியும், பெலாரஸ் நாட்டு வீராங்கனையான அரினா சபலென்காவும் மோதிக்கொண்டனர்.இதில் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய சபலென்கா முதல் செட்டில் , ஒரு கேம் கூட இழக்காமல்  6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் ஆஷ்லி பார்ட்டி கடந்த 4 ஆண்டுகளில், ஒரு செட் கணக்கில் ,ஒரு கேம் கூட வெற்றி பெறாதது, இதுவே முதல் முறையாகும். இதன் பிறகு நடைபெற்ற 2வது செட்டில் ஆஷ்லி பார்ட்டி கைப்பற்றினார். ஆனால் இறுதியில் அதிரடி காட்டிய சபலென்காவின் வேகத்திற்கு, ஆஷ்லி பார்ட்டியால் ஈடு கொடுக்க முடியவில்லை.  1 மணி நேரம் 30 நிமிடங்கள் நடந்த போட்டியில் 6-0, 3-6, 6-4  என்ற செட் கணக்கில்,சபலென்கா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் .

இந்த வெற்றியின் மூலமாக  கடந்த 2 வாரத்திற்கு முன் நடைபெற்ற, ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில், சபலென்கா தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதோடு தொடர்ச்சியாக களிமண் தரையில் 16 போட்டிகளில் வென்ற, ஆஷ்லி பார்ட்டியின் சாதனையும் முறியடித்துள்ளார். வெற்றிக்குப் பிறகு சபைக்கும் கூறும்போது, இதற்குமுன் நடைபெற்ற ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், எனக்கு காயம் ஏற்பட்டதால் மிகவும் அவதிப்பட்டேன். எனவே இந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, விலகி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் 4 நாட்களில் அடிபட்ட காயத்திலிருந்து, மிக வேகமாக குணமடைந்ததால் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியனாக நிற்கிறேன் என்றும் ,இந்த வாரம் எனக்கு மிக வியப்புக்குரிய வாரமாக அமைந்துள்ளதாகவும் ,அவர் கூறினார்.

Categories

Tech |