தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று முதல் துவங்கும் முழு ஊரடங்கானது சென்ற காலங்களில் விதித்த ஊரடங்கு விட சிறிய அளவில் மாறானது. எனவே பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஊரடங்கு சம்பந்தமான காவல்துறை அதிகாரிகளின் பழைய உத்தரவு வீடியோ மற்றும் ஆடியோ களை யாரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது.