Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உணவால் ஏற்பட்ட பிரச்சனை…. ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்ற தந்தை மகன்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….!!

குடும்பத் தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் சுந்தரமூர்த்தி-தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று தேவிகா தனது கணவருக்கு உணவு எடுத்து வைத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுந்தரமூர்த்தி தனது மகனை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். இதில்  வேதனை அடைந்த தேவிகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின் சுந்தரமூர்த்தி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும்போது மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |