Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த தேதியில் இருந்து வழங்கப்படும்…. அதிகாரிகளின் திட்டவட்ட தகவல்….. மகிழ்ச்சியில் குமரி மக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நிதி தொகையாக 2,000 ரூபாய் மே மாதம் 15ஆம் தேதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலின் இடையே நிவாரண தொகையாக ரேஷன் அட்டைதாரருக்கு 4,000 ரூபாய் கொடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக திரு முக. ஸ்டாலின் அவர்கள்  அறிவித்திருந்தார். இதனையடுத்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு. முகஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் வருகின்ற 15ஆம் தேதி முதல் கொரோனா நிதி தொகையானது, இரண்டு தவணையாக கொடுக்கப்படும் என்று திரு முக. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். இதன் முதல் தவணையாக மே மாதம் 2,000 ரூபாய் கொடுக்கப்படும் எனவும் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் வருகின்ற 15 ஆம் தேதி முதல் 5 லட்சத்து 51 ஆயிரத்து 279 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கும் பணியானது துவங்கப்படும் என்று கூட்டுறவு துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |