டிவிட்டரில் கணக்கை துவங்கிய இயக்குனர் பாலா தனது முதல் ட்விட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இந்த முதல்படமே இயக்குனர் பாலாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை தந்தது. இதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக நான் கடவுள் திரைப்படத்திற்காக இயக்குனர் பாலாவிற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் பாலா டுவிட்டரில் தனது கணக்கை தொடங்கியுள்ளார். அவர் தனது முதல் ட்விட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தேவையற்ற வாழ்த்துக்கள் தெரிவிப்பதை தவிருங்கள் என்று நீங்கள் கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும் இதை தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரீகத்தின் உச்சம். நன்றிகள்.
“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி”. என்று பதிவிட்டுள்ளார்.
— Director Bala (@IyakkunarBala) May 9, 2021