Categories
தேசிய செய்திகள்

ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…? அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை… நிர்ணயம் செய்த எண்ணெய் நிறுவனங்கள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகபட்ச அளவில்  உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் அதன் விலை சற்று குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த மே 4ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னையில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை 93.38ரூபாயாகவும், டீசல் 86.96 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97.86 ரூபாயாகவும், டீசலின் விலை 89.17  ரூபாயாகவும் விற்கப்படுகிறது. மேலும் கொல்கத்தாவில் பெட்ரோலின் விலை 91.66 ரூபாயாகவும், டீசலின் விலை லிட்டருக்கு 84.90 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை 91.53 ரூபாயாகவும், டீசல் 82.06 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |