Categories
உலக செய்திகள்

அஸ்ராஸெனக்காவை மறக்க மாட்டோம்…. சக்திவாய்ந்த தடுப்பூசி தேவை…. அறிவித்தார் பிரான்ஸ் ஜனாதிபதி….!!

பிரான்ஸ் அரசு கொரோனா தடுப்பூசி அஸ்ராஸெனக்காவிற்கான ஒப்பந்தங்களை புதுப்பிக்க போவதில்லை என அறிவித்துள்ளது.

பிரான்ஸில் கொரோனா இரண்டாவது அலை பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நோய் பரவலை தடுக்கும் முயற்சியில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனால் பிரான்சில் தற்போது நோய் தொற்று குறைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் “ஐரோப்பாவின் எதிர்காலம்” என்ற மாநாடு ஒன்று சமீபத்தில் நடைபெற்று உள்ளது. இந்த மாநாட்டில் கொரோனாவின் தடுப்பூசி யான அஸ்ராஸெனக்காவிற்கான ஒப்பந்தம் எதையும் புதுப்பிக்க போவதில்லை என சுவீடன் மற்றும் பிரித்தானியா நாடுகள் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியதாவது “பிரான்சும் ஐரோப்பாவும் அஸ்ராஸெனக்காவை புதுப்பிக்கப் போவதில்லை. அதே சமயத்தில் ஆபத்தான நேரத்தில் கை கொடுத்து உதவிய அஸ்ராஸெனக்காவை மறக்கப் போவதில்லை. ஆனால் தற்போது பரவி வரும் வைரஸ் உருமாறி பல்வேறு கோணங்களை எடுத்து வருகிறது. அதனை எதிர்கொள்ள சக்திவாய்ந்த தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |