14 வது ஐபில் தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்ற, சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சேத்தன் சக்காரியா, குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் . இவர் கடந்த ஜனவரி மாதம் முஷ்டாக் அலி டிராபி போட்டி தொடரில் விளையாடி கொண்டிருந்தபோது அவருடைய சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இந்த சீசன் ஐபில் போட்டியில் இடம்பெற்று ,திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினார் .ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , ஐபில் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் வீரர்கள் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பி உள்ளனர் .
இந்த நிலையில் சேத்தன் சக்காரியாவும், சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றுள்ளார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் இவரது தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அப்போது ஐபில் போட்டியில் கிடைத்த வருமானத்தை வைத்துதான், தந்தைக்கு சிகிச்சை அளித்து வருவதாக, சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.இந்நிலையில் இவரது தந்தை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . இவரது தந்தை மறைவிற்கு ராஜஸ்தானின் நிர்வாகம் மற்றும் வீரர்கள் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.