நெல்லையில் விஷத்தை குடித்து விவசாயி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் விவசாயியான அந்தோணிராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அந்தோணி ராஜ் குடும்ப பிரச்சினையின் காரணத்தால் அதே பகுதியிலிருக்கும் தோட்டத்தினுள் விஷத்தினை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அந்தோணிராஜ்ஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.