Categories
உலக செய்திகள்

நடக்க கூட தெம்பு இல்ல..! 21 வயது இளம்பெண்ணிற்கு ஏற்பட்டுள்ள சோகம்… காப்பாற்ற துடிக்கும் சொந்தங்கள்..!!

சிறுநீரக கற்கள் காரணமாக பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் நாளுக்கு நாள் உடல் மெலிந்து 21 மணி நேரமும் தூங்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள தென் யார்க்ஷயரின் டான்காஸ்டர் என்ற பகுதியில் வசித்து வரும் 21 வயதான எம்மா டக் என்ற இளம்பெண் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு ஒழுங்காக சாப்பிட முடியாமல் 21 மணி நேரமும் படுக்கையிலேயே படுத்தபடி உள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்பு எம்மா, லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் பட்டம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு சிறுநீரக கற்கள் ஏற்பட்டிருப்பது மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எம்மாவுக்கு சிறுநீரக கல் ஒரு பக்கத்தில் வெளியேற்றப்பட்டதையடுத்து மற்றொன்று அவருடைய சிறுநீரகத்தில் சிக்கிக்கொண்டது. அதனை தொடர்ந்து மருத்துவர்கள் இன்னொரு கல்லையும் குழாய் மூலம் அப்புறப்படுத்தினர்.

இதனால் சில வார காலம் அந்த குழாயானது அவருக்குள் இருந்து வந்ததால் மிகவும் அவதிப்பட ஆரம்பித்துள்ளார். மேலும் கடந்த மூன்று வருடங்களாக அவதிப்பட்டு வரும் எம்மாவுக்கு மருத்துவர்கள் தரப்பினர் கஸ்ட்ரிக் பசேமகேர் கருவியை பொருத்தினால் பலன் கிடைக்கும் என்று பரிந்துரை செய்துள்ளனர். மேலும் NHS-ல் இதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் 30,000 பவுண்டுகள் வரை தனியாக பொருத்தி கொள்ள செலவாகும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமின்றி உரிய சிகிச்சைக்கு லண்டனுக்கு செல்ல வாய்ப்பு இருக்கும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் படுக்கையை விட்டு எழுந்து நடக்க கூட தெம்பில்லாமல் ஒரு சூழலில் எம்மா உள்ளார். தற்போது எம்மாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருடைய சிகிச்சைக்காக பணம் திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |