ராணிப்பேட்டையில் பாரில் வைத்து மதுவினை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டையில் அமைந்திருக்கும் பேருந்து நிலையத்திற்கு அருகே மதுபான கடைக்கு பக்கத்தில் பார் அமைந்துள்ளது. இந்தநிலையில் மதுபானக்கடை காலை 8 மணியளவில் திறந்து மாலை 6 மணியளவில் மூடிவிட்டது. ஆனால் மதுபான கடைக்கு அருகில் உள்ள பாரில் இரவு 8 மணிக்கும் மேலாக மது பாட்டில்களை விற்பனை செய்வது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மதுவினை விற்பனை செய்த கௌரி என்ற வாலிபரை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர் வைத்திருந்த 390 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.