தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
எனவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்கவும், கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றவும் பலரும் உதவி செய்து வருகின்றனர். பலர் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் பகுதி 62 (அ) வட்டம் ரிச்சி தெரு குடிசைப்பகுதி, வண்ணார தெரு ஆகிய இடங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கான நிவாரணப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் மளிகை சாமான்களை அத்தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.