தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அத்தியாவசிய கடைகளும் 12 மணிக்கு பிறகு இயங்காது.
தமிழகம் முழுவதும் இனி கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துவ உதவியாக இருந்தாலும் வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் வீடு தேடி வந்து மருந்துகள் வழங்கப்படும் என்று மொத்த விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மருந்து மற்றும் மருத்துவ தேவை உள்ளவர்கள் 9342066888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கொரோனா நோயாளிகள், முதியவர்களுக்கு 50% தள்ளுபடி விலையில் மருந்து வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.