Categories
சினிமா தமிழ் சினிமா

கதைக்கேற்ற நாயகி…. ஹீரோயின் ஆனார் கேப்ரியலா…. அவரே வெளியிட்ட பதிவு…!!!

சீரியல் நடிகர் கேப்ரியலா வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை கேப்ரியலா செல்லஸ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். சுந்தரியின் திறமையான நடிப்பிற்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் நடிகை கேப்ரியெல்லா முதல் முறையாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

அதன்படி ‘N4’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அக்சய் கமல் , மைக்கல் தங்கராஜன், வடிவுக்கரசி, அனுபமா குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். லோகேஷ் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கேப்ரியலா ஒரு மீனவப் பெண்ணாக நடித்துள்ளார். இதுகுறித்து கேப்ரியலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, கதைக்கு ஏற்ற நாயகியாக நான் அறிமுகம் ஆகும் முதல் படம் ‘N4’ என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/COh-Iakh0Ee/?igshid=13fc29zbcx7sj

Categories

Tech |