சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி ..
தேவையான பொருட்கள்:
மாங்காய் – 1
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
வெந்தயத் தூள் – 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு மற்றும் துருவிய மாங்காய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும் . மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி , வெந்தய தூள், பெருங்காயத்தூள் சேர்த்து , வதக்கிய மாங்காயில் கொட்டி கிளறினால் சுவையான மாங்காய் தொக்கு தயார்!!!