Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எதுவும் சரியா கட்டல… இதெல்லாம் ரொம்ப தப்பு… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது வரி கட்டாமல் மற்றும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 3  ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள பூதகுடி சுங்கச்சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தேவராஜ் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து நாகர்கோவில், மதுரை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சென்ற 3 ஆம்னி பேருந்துகளை சோதனையிட்டனர்.

அதில் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட 2 ஆம்னி பேருந்துகள் மற்றும் கர்நாடகாவிலிருந்துந்து பதிவு செய்யப்பட்ட 1 ஆம்னி பேருந்து சாலை வரி  கட்டாமலும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அந்த பேருந்துகளை பறிமுதல் செய்து விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பேருந்துகளில் இருந்த பயணிகளை வேறொரு பேருந்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |