பிரித்தானியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதை தொடர்ந்து வருகின்ற 17-ஆம் தேதி முதல் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையிலும் கொரோனா முதல் தடுப்பூசியை பாதி மக்கள் போட்டுக் கொண்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடைக்கு வருகின்ற 17-ஆம் தேதி முதல் விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளைய செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஊரடங்கில் பல தளர்வுகளும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சில இடங்களுக்கு வருகின்ற 17-ஆம் தேதிக்கு பிறகு வெளி நாடுகளில் விடுமுறை அனுமதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.