Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

சீக்கிரமா நீங்களும் போட்டுக்கோங்க…. முதல் டோஸ் போட்டுக்கொண்ட கோலி டுவிட்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால்  நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இதையடுத்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “நீங்களும் தடுப்பூசியை விரைவாக செலுத்தி கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இஷாந்த் சர்மா, ரஹானே, தவான் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |