திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 284 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வந்த 182 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரையிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,228 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.