Categories
உலக செய்திகள்

வேகமாக வீசிய காற்று…. திடீரென உடைந்த கண்ணாடி பாலம்…. அலறி நடுங்கிய சுற்றுலா பயணி…. வைரலான வீடியோவால் பரபரப்பு….!!

கண்ணாடி பாலத்தில் நடந்து சென்ற கொண்டிருக்கும்போது திடிரென கண்ணாடி உடைந்ததால் சுற்றுலா பயணி பயந்து நடுங்கிய காட்சி இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் Longjing என்ற கிராமத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் நடப்பதற்கு சுற்றுலா பயணிகள் பயந்து நடுங்குவார்களாம். உண்மையாகவே இந்த பாலத்தின் மீது நடப்பதற்கு அதீத தைரியம் வேண்டும். பொதுவாக இந்தப் பாலத்தின் மீது நடக்கும் சுற்றுலாப் பயணிகளை ஸ்பெஷல் எஃபெக்ட் மூலம் பாலத்தின் மீது நடக்க வைத்து திடீரென கண்ணாடி உடைவது போல சித்தரிக்கப்பட்டு மக்கள் அலறும் வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகுவது வழக்கமான ஒன்று.

இந்நிலையில் இந்த பாலத்தில் ஒரு சுற்றுலா பயணி நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசியுள்ளது. இதில் பாலத்தில் இருந்த கண்ணாடி தகடுகள் சில அடித்து செல்லப்பட்டுள்ளன. அதனால் அந்த சுற்றுலா பயணி பயந்து நடுங்கி பாலத்தின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை பிடித்துக் கொண்டு தன்னை காப்பாற்றும்படி அலறியிருக்கிறார். இது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/gtUOOR5rQYk

பின்னர் இது குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், வனத்துறை அலுவலர்கள், காவல் துறையினர் அனைவரும் இணைந்து அந்த சுற்றுலாப் பயணியை மீட்டுள்ளனர். அதன் பின் உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |