சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் கடந்தாண்டு முதல் கொரோனா காரணமாக பல்வேறு பிரபலங்களும் உயிரிழந்துவருகின்றனர். சமீபத்தில் இயக்குநர் கே.வி. ஆனந்த், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன் என அடுத்தடுத்து மரணங்கள் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பலம்பெரும் நடிகரான ஜோக்கர் துளசி சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
நேற்று ஜோக்கர் துளசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்த்திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜோக்கர் துளசி பல்வேறு கதாநாயகர்களின் படத்தில் காமெடி, குணச்சித்திரம் உள்ளிட்ட கேரக்டர்களிலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.