14வது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்ற, அஸ்வின் பாதியிலேயே தொடரை விட்டு திரும்பியதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இதற்கு முன்பாகவே போட்டி நடைபெற்று கொண்டிருந்த,சமயத்தில், டெல்லி அணியில் விளையாடிக்கொண்டிருந்த அஸ்வின், தனிப்பட்ட காரணத்திற்காக போட்டியை விட்டு விலகினார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, என்று செய்திகள் வெளியானது. இதுபற்றி அஸ்வினின் மனைவி தன்னுடையசி ட்விட்டர் பக்கத்தில் எங்களுடைய குடும்பத்தில் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும்,அதோடு பெரியவர்கள் ,சிறியவர்கள் என அனைவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் ,என்று அவர் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாகவே அஸ்வின் போட்டியில் பாதியிலேயே விலகினார் என்று தெரியவந்தது.
இதனால் வீடு திரும்பியதும் இதுபற்றி அஷ்வின் தகவலை பகிர்ந்து கொண்டார். அதில், நான் ஐபிஎல் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த போது, என்னுடைய குழந்தைகளுக்கு தீவிர காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு மருந்துகள் கொடுத்தும் பலன் அளிக்கவில்லை . இதனால் என்னுடைய மனைவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து என்னுடைய தந்தைக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. முதல் ஐந்து நாட்கள் நன்றாக இருந்த என்னுடைய தந்தை, அதன் பிறகு அவருக்கு ஆக்சிஜனின் அளவு குறையத் தொடங்கியது. எனது தந்தைக்கு இரண்டு முறை தடுப்பூசி செலுத்திய பிறகுதான் அவர் தற்போது நலமுடன் காணப்படுகிறார். இதைத்தொடர்ந்து என்னுடைய தந்தையை காப்பாற்ற முக்கியமாக இருந்தது, இந்த தடுப்பூசி மட்டும் தான். எனவே அனைவரும் தடுப்பூசியை கட்டாயம் எடுத்துக்கொள்ளுமாறு ,அஸ்வின் கேட்டுக்கொண்டார்.