புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . இதனால் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் ஊரடங்கின் போது மது அருந்துவதற்க்காக மது பிரியர்கள் மது பானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றுள்ளனர். இதனால் மதுபானங்கள் விற்பனை இரு மடங்கு உயர்ந்ததுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டுள்ளது.