கொரோனா தொற்றின் மூன்றாம் கட்டத்தை தடுக்க வேண்டுமானால் வலிமையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலரும் கொரோனாவின் மூன்றாம் அலையை பற்றி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
இதுகுறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான டாக்டர் விஜயராகவன் கொரோனாவின் மூன்றாம் நிலை குறித்து கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் புதிய அலைக்கு அரசு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இனிமேல் கடுமையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டால் மட்டுமே கொரோனா தொற்றின் மூன்றாம் அலையை நாம் தகர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மாவட்டங்கள், மாநிலங்கள், உள்ளூர் பகுதிகளில் வழிகாட்டுதல் திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும், அதைப் பொறுத்தே மூன்றாம் வகையை தவிர்க்க முடியும் எனவும் டாக்டர் கே விஜயராகவன் கூறியுள்ளார்.