தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு புரோகிதர் ஆன்லைனில் மந்திரம் சொல்ல திருமணம் நடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொரோனா தீவிரமாக பரவி வருவதால் பெரும்பாலான மக்கள் அனைவரும் அதிக அளவில் வீட்டிலேயே இருக்கின்றன. திருமணங்கள் மற்றும் இறப்புகளுக்கும் கூட பல கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மெதக் மாவட்டத்தை சேர்ந்த சிவராம் என்பவர் மகள் மஞ்சுளாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது.
இது கொரோனா அதிகமுள்ள காலம் என்பதால் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து இருந்தனர். ஆனால் அந்த கிராமத்தில் கொரோனா வைரஸ் காரணமாக இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இதனால் திருமணத்திற்கு பதிவு செய்திருந்த புரோகிதர் கல்யாணத்திற்கு வரமுடியாது என்று கூறிவிட்டார். இதையடுத்து அந்த புரோகிதர் ஆன்லைன் மூலம் மந்திரத்தை சொல்லவே மணமக்கள் இருவரும் அதைக் கேட்டுக்கொண்டு கழுத்தில் தாலி கட்டிக் கொண்டனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.