வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மே 11ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, தென் தமிழக கடலோர மாவட்டம், சேலம், தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே 12ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே குளிரூட்டும் வகையில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.