Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு வரும் 15 முதல் ரூ.2000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். கொரோனா நிவாரண உதவித் தொகையாக முதல் தவணை 2000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஏழை எளிய மக்களுக்கு 2000 வழங்கும் பணியை கூட்டுறவுத்துறை சிறப்பாக செய்து முடிப்போம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |