Categories
சினிமா தமிழ் சினிமா

பாகுபலி பட நடிகருடன் இணையும் சுதா கொங்கரா?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் சுதா கொங்கரா இறுதிச்சுற்று படத்தை இயக்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கினார். கடந்த வருடம் ஓடிடியில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது.

Sudha Kongara narrates script to Prabhas - tollywood

இதை தொடர்ந்து தொடர்ந்து நடிகர் அஜித்துடன் சுதா கொங்கரா இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சுதா கொங்கரா பாகுபலி பட நடிகர் பிரபாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |