அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், கொரோனா தொற்று பரவல் தொடர்பில் புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், கொரோனோவிற்கான புதிய வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதில் கொரோனா பாதித்தவர்களிடமிருந்து காற்றின் மூலமாக சுமார் 6 அடி தொலைவில் இருந்தாலும் பிறருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் உள் புறபகுதிகளில் காற்றோட்டம் குறைவாக இருந்தால், கொரோனா நோயாளிகளின் சளி மூலமாக வெளியேறும் வைரஸ் மற்றவர்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களின் மூச்சுக் காற்றிலிருந்து வெளியேறும் சிறிய நீர்த்துளிகளும் சுமார் 6 அடி தூரம் வரை எளிதில் பரவும் சக்தி கொண்டது.
எனவே தொற்று அபாயங்களிலிலிருந்து தப்பிப்பதற்கு சமூக இடைவெளியை மேலும் சில தூரங்கள் அதிகரிக்க வேண்டும். மேலும் மூச்சை ஆழமாக இழுத்து கொண்டு கொரோனா பாதித்தவர்களிடமிருந்து கடந்து சென்ற பிறகு சுவாசித்தால் பரவலை குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.