Categories
தேசிய செய்திகள்

ஆம்புலன்சுக்கு 1.2 லட்சமா..? மனிதநேயம் இல்லாத ஓட்டுநர்… அதிர்ச்சியில் கொரோனா நோயாளிகள்..!!

டெல்லியில் நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்சுக்கு 1.2 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க பல மாநிலத்தில் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஹரியானாவின் குருகிராமம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு வாகனம் இல்லாமல் அலைந்து திறந்த நிலையில் லூதியானா மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்ஸ் கிடைத்தது.

அந்த ஆம்புலன்சில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் 1.2 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்து உள்ளார். இதையடுத்து அந்த பெண்தான் கட்டிய தொகை ரசீதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆம்புலன்சுக்கு இவ்வளவு தொகை செலவழித்து இருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆம்புலன்ஸ் கட்டணத்தை அதிகமாக வாங்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |