Categories
மாநில செய்திகள்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது…? – அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் கடந்த வருடமே மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் இந்த வருடமும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தேர்வுகளும் ஆன்லைன் வழியே நடத்தப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் என தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா உச்சம் தொட்டுள்ள நிலையில் பள்ளிகளை திறக்க இயலாத நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 12 ஆம்  வகுப்பு பொதுத் தேர்வை எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து அனைத்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம் என்றாலும் கூட அவர்களுடைய உடல் நலமே அதைவிட முக்கியமானது. எனவே 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வருவதில் சிக்கல் உள்ளது. எனவே இந்த விஷயத்தில் நன்கு ஆலோசித்த பின்னரே முடிவெடுக்கப்படும் முடியும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம். இது தொடர்பாக முதலமைச்சர் மு,க ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்திய பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |