கோவிட் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த இறுதிச் சடங்கின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த விஷயங்களுக்கு பல கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளனர். இருப்பினும் பல மாநிலங்களில் இதை முறையாக கடைபிடிக்க மக்கள் தவறிவிடுகின்றனர். இதன் காரணமாகவே கொரோனா தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் நான் தற்போது அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் ‘காஜி’ ஷேக் அப்துல் ஹமீத் முஹம்மது சலீம் காத்ரி ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். இதையடுத்து நடந்த அவரது இறுதி சடங்கு நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அதில் பெரும்பாலோனோர் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை. இந்த வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காததால், மாநில போலீசார் இன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.