Categories
தேசிய செய்திகள்

“மாட்டுச் சிறுநீரை சாப்பிட்டுதான் கொரோனாவில் இருந்து தப்பித்தேன்”… பாஜக எம்எல்ஏ வெளியிட்ட வீடியோ..!!

கொரோனா பரவுவதை தடுக்க மாட்டுச் சிறுநீரை அதாவது கோமியத்தை குடிப்பது நல்லது என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தாண்டி ஆயுஸ் 64 மற்றும் கபசுர குடிநீர் போன்ற சித்த மருத்துவம் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க மாட்டு சிறுநீர் உதவும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

https://youtu.be/1iqs3KxcFHg

அதில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மக்களுக்கு சேவை செய்த போதிலும் நான் ஆரோக்கியமாக இருக்க காரணம் மாட்டுச் சிறுநீரை நான் தொடர்ந்து குடித்து வருவதால் தான். இதை எப்படி குடிக்க வேண்டும் என்றால் மூன்று மூடி மாட்டு சிறுநீர் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து அப்படியே குடிக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார். மேலும் இதை குடித்தவுடன் அரை மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |