நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் கடந்த வருடமே மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் இந்த வருடமும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தேர்வுகளும் ஆன்லைன் வழியே நடத்தப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் என தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள மாணவியருக்கு ஊட்டச்சத்து அயோடின், வைட்டமின் ஏ குறைபாடு அதிகரித்து வருவதால் அரசு பள்ளிகளில் 9 முதல் 12 வரை பயிலும் மாணவியருக்கு மாதவிடாய் கால ஆரோக்கியம் & மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்து வரும் 14ம் தேதி பயிற்சி ஆசிரியை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.