அசாம் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஹிமந்தா பிஸ்வாக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அசாமில் 15வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அசாம் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இன்று ஹிமந்தா பிஸ்வாக்கு மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து முன்னாள் முதல்வர் பதவியில் இருந்த சர்பானந்த சோனாவால் ராஜினாமா செய்தார் தனது ராஜினாமா கடிதத்தையும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.
இதை தொடர்ந்து புதிய முதல்வராக ஹிமந்தா பிஸ்வா பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்றுக் கொண்டதற்கு பல மாநில தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ” அசாம் முதல்வராக பதவி ஏற்கும் ஹிமந்தா பிஸ்வாக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.