நடிகர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று நடிகர் பாலா கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
இதில் திரை பிரபலங்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பாலா பேசியதாவது, என்னை மதித்து இந்த நிகச்சிக்கு அழைத்ததற்கு மிகவும் நன்றி. நான் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன். தன்னால் முடிந்த உதவிகளை யார் செய்கிறார்களோ அவர்களை கோடீஸ்வரர் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர் அண்ணாத்த படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, தன் அண்ணன் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்திற்காக நான் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளேன். மேலும் நான் மிகப்பெரிய ரஜினி ரசிகன். அவர் இயல்பாகவே குறும்புத்தனமும், காமெடி உணர்வு மிக்கவர். என்னைக் கேட்டால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று கூறுவேன்.மேலும் அவர் தன் திறமையின் மூலம் மக்களை மகிழ்விப்பதையே ஒரு ரசிகனாக நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.