நடிகர் விஷால் சாலையோரம் வசித்து வருபவர்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
இதில் திரை பிரபலங்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தனது தாயின் தேவி அறக்கட்டளை மூலம் சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்ற 500 பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார்.
இதனை தேவி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் செயல்படுத்தி வருகிறார். மேலும் நடிகர் விஷால் ஏழ்மை குடும்பத்தில் இருக்கும் நன்றாக படிக்கும் மாணவர்களை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்பு செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். ஊரடங்கு காலங்களில் மாற்றுத்திறனாளிகள், துப்புரவு பணியாளர்கள், வறுமையால் வாடும் பொதுமக்கள் என அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். இதுபோன்று நடிகர் விஷால் தொடர்ந்து செய்துவரும் நற்செயல்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.