தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளின் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் பருவத்தேர்வு முறையாக நடக்கவில்லை. நவம்பர் மற்றும் டிசம்பர் இறுதியில் பருவத் தேர்வில் 25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆன்லைன் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் அறிவித்துள்ளார்.