தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
எனவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்கவும், கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றவும் பலரும் உதவி செய்து வருகின்றனர். பலர் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்க உள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன், தடுப்பு மருந்து உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ரூபாய் 150 கோடி நிதி உதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது .இந்த ஒரு நாள் ஊதியம் அவர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.