Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. மே 25 முதல் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளும்  தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மே 25ஆம் தேதி முதல் பட்டப் படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே வெளியிடும். ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்த படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |