மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி இலை – 1 கட்டு
தக்காளி – 4
தனியா – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தக்காளியுடன் கொத்தமல்லி இலை , தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்தால் சுவையான கொத்தமல்லி ரசம் தயார் !!!