கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி பெரும் நிதி நெருக்கடியை சந்தித்தனர். அதனால் அரசு சார்பாக பொருளாதார சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி பிஎஃப் சேமிப்பு பணத்தை மக்கள் உடனடியாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பி செலுத்த வேண்டிய அவசியமில்லாத முன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.
இதனையடுத்தே பிஎஃப் படத்தை மக்கள் அதிக அளவில் எடுத்து வருகிறார்கள். ஆனால் அவ்வாறு பணத்தை எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். தங்களின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு மாற்று வழி ஏதாவது உள்ளதா என்று அதனை தேடுங்கள். தற்போது பிஎஃப் சேமிப்பு பணத்தை நீங்கள் எடுத்து பயன்படுத்திக் கொண்டால் உங்களின் முதிர்வு காலத்தில் மிகப் பெரிய தொகையை நீங்கள் இழக்க நேரிடும். பிஎஃப் சேமிப்பு மூலமாக உங்களுக்கு 8.5% வட்டி கிடைக்கும்.
உங்களின் ஓய்வூதியத்தில் 30 ஆண்டுகள் மீதமுள்ள நிலையில் தற்போது உங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் எடுத்தார் 30 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு 11 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும். தற்போது நீங்கள் 50,000 எடுத்தால் 20 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு லட்சம் ரூபாயும் 30 ஆண்டுகள் கழித்து 5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும். அதனால் அவசர காலத்தில் பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்திவிட்டு எதிர்கால வாய்ப்பை தவறவிடாதீர்கள். உங்களின் நிதி நெருக்கடியை சரி செய்ய வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று பாருங்கள்.