சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி ….
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 10
வரமிளகாய் – 4
பூண்டு – 2 பல்
சீரகம் – 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணைய் – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் ஒரு கடாயில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து , வெங்காயம், மிளகாய் மற்றும் பூண்டு போட்டு வதக்க வேண்டும். பின் இதனுடன் சுத்தம் செய்த கீரை மற்றும் சீரகத்தை போட்டு ,சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விட வேண்டும். கீரை நன்றாக வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் தயார் !!!