இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தங்களின் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் ஒருசில மக்கள் சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால்உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. “பசித்தால் எடுத்துக்கொள். பணம் வேண்டாம்” என்ற வாக்கியத்துடன் ஒரு வண்டியில் உணவு பொட்டலங்கள் மற்றும் வாழைப்பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. உதவ நினைத்தால் தொடர்பு கொள்ளவும் என தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவித விளம்பரமும் இல்லாமல் செய்து வரும் இந்த உதவி வரவேற்ப்பை பெற்றுள்ளது.