திருத்தணியில் இளைஞரை ஹோட்டலுக்குள் புகுந்து வெட்டி கொலை செய்த 4 பேர் காவல் நிலையத்தில் தாமாகவே சரணடைந்தனர்.
திருத்தணியில் நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்ற இளைஞரை 4 பேர் ஓட ஓட விரட்ட, உயிருக்கு பயந்து அருகில் இருந்த ஒரு ஓட்டலுக்குள் அவர் புகுந்துள்ளார். இருந்தும் விடாமல் ஓட்டலுக்கு சென்று 4 பேரும் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். கைப்பந்து போட்டியில் தகராறு ஏற்பட்டதே இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த விமல்ராஜ், கோபிராஜ், ராஜ்குமார் மற்றும் அஜித் குமார் ஆகிய 4 பேர் திருத்தணி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாமாகவே சரணடைந்தனர். காவல்துறையினர் அவர்கள் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.