பெண்ணிடம் தங்கநகையை பறித்துவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நகரப்பொற்றைவிளை பகுதியில் நெல்சன் மகன் நிஷா வசித்து வந்துள்ளார். இவர் வாத்தியார்கோணம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் ஸ்கூட்டர் ஓட்டி கற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற கப்பியறை மருதங்கோடு பகுதியில் வசித்து வரும் தங்கமணி மகன் ஜெகன் திடீரென நிஷாவின் கழுத்தில் இருந்த 2 1/4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிஷாவின் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து ஜெகனை விரட்டி சென்று கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.
அதன்பின் ஜெகனிடம் இருந்த அந்த தங்கசங்கிலியை மீட்டு நிஷாவிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஜெகன் மோட்டார் சைக்கிளில் சென்று தங்கசங்கிலி பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று வந்ததும் கவத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் தங்கசங்கிலியை பறித்த குற்றத்திற்காக காவல் துறையினர் ஜெகனை கைது செய்து செய்துள்ளனர்.